/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஸ்கூட்டர் மீது பஸ் மோதி பள்ளி மாணவி பலி
/
ஸ்கூட்டர் மீது பஸ் மோதி பள்ளி மாணவி பலி
ADDED : ஆக 12, 2025 07:39 PM
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு கொடும்பு கரிங்கரைப்புள்ளி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி தேவி, 38. தேவியின் அண்ணன் சதீஷ் மகள் ஆரதி, 13. சந்திரநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பாட்டியை காண, கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக, தேவியுடன் ஆரதியும் ஸ்கூட்டரில் சென்றார். மருத்துவமனை முன்பாக, குருவாயூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற தமிழக அரசு பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், ஆரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலக்காடு டவுன் தெற்கு போலீசார், விசாரிக்கின்றனர்.