/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளி மாணவியர் மாயம்: தேடும் குன்னுார் போலீசார்
/
பள்ளி மாணவியர் மாயம்: தேடும் குன்னுார் போலீசார்
ADDED : செப் 07, 2025 11:02 PM
குன்னூர்; குன்னுாரில் காணாமல் போன பள்ளி மாணவிகள், 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் டி.டி.கே. ரோடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளியில் பயிலும், 2ம் வகுப்பு, 8ம் வகுப்பு பயிலும், 7, 13, 14 வயதுடைய மாணவிகள், 3 பேர் நேற்று முன்தினம் மாலை, 3:30 மணி முதல் காணாமல் போயினர்.
கூலி தொழிலாளர்களாக உள்ள பெற்றோர் பல இடங்களிலும் தேடி கிடைக்கவில்லை. இதனால், குன்னுார் போலீசில் புகார் கொடுத்தனர்.
இதன் பேரில் போலீசார் ப ல இடங்களிலும் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தேடி வருகின்றனர். இரு தனிப்படை போலீசார், மேட்டுப்பாளையம் மற்றும் சென்னைக்கு சென்றுள்ளனர்.