/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அறிவியல் விழிப்புணர்வு: மாணவர்கள் ஆர்வம்
/
அறிவியல் விழிப்புணர்வு: மாணவர்கள் ஆர்வம்
ADDED : மார் 07, 2024 03:34 AM
பந்தலுார், : தமிழ்நாடு அறிவியல்இயக்கம் சார்பில், எருமாடு பகுதியில் அமைந்துள்ள மராடி அரசு நடுநிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மராடி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அஷ்ரப் மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஷீஜா ஆகியோர் தலைமை வகித்தனர்.
அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ சிறப்பு கருத்தாளராக பங்கேற்று பேசியதாவது:
இந்தியா அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில், குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. 'நிலவில் காலடி வைத்த ஆறாவது நாடு, நிலவில் தண்ணீர் கண்டுபிடித்த முதல் நாடு, ஏவுகணை செலுத்துவதில் உலக அளவில் ஆறாவது நாடு,' என, பல விண்வெளி துறைகளில் முன்னேற்றம் அடைந்திருப்பது பாராட்டுக்குரியது.
இருப்பினும், பல துறைகளில் நாம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளோம். உலக அளவில் சுகாதாரத்தை பொறுத்தமட்டில், இலங்கை, ஆப்கானிஸ்தானை விட பின்தங்கி உள்ளோம். மேலும், மக்களின் கல்வி தரமும், அறிவியல் விழிப்புணர்வும் மிக, மிக குறைவாகவே உள்ளது. தென்கொரியா, சீனா ஆகிய நாடுகள் அறிவியல் எழுத்து அறிவில், 75 சதவீதத்துக்கு மேல் உள்ளது. அவர்களை எதிர்கொள்ள கல்வியில் மாற்றம் வேண்டும்.
பல மாநிலங்களில் மக்கள் வறுமை கோட்டில் உள்ளனர். அதனை மேம்படுத்தும் பணி அவசியம் இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் அஞ்சலின் பிரிட்டோ, ரஷீனா ராமச்சந்திரன், ஸ்ரீஜா மற்றும் ஸ்ரீலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

