/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சோகத்தொரை கிராமத்தில் அறிவியல் திருவிழா
/
சோகத்தொரை கிராமத்தில் அறிவியல் திருவிழா
ADDED : ஜன 07, 2025 01:56 AM
குன்னுார்; குன்னுார் அருகே சோகத்தொரை கிராமத்தில் அறிவியல் திருவிழா நடந்தது.
வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் மோகனா தலைமை வகித்தார்.
சக்கலட்டி, நேர்கம்பை, வாணி விலாஸ் தெரு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் வட்டார பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்று குழுக்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். விழாவில், பல்வேறு மாணவர்கள் அறிவியல் திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதில், மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்த, 'கிராமத்து நீர்' என்ற ஆய்வை மேற்கொண்ட மாணவியர் வினிஷா, சமிக்ஷா, கீர்த்தனா ஆகியோர் ஆய்வின் சிறப்பு குறித்து பேசினர். ஊர் தலைவர் பசுபதி வாழ்த்தி பேசினார்.
ஏற்பாடுகளை, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பிரியா, சுகுணா, வானவில் மன்ற பொறுப்பாளர் புஷ்பா ஆகியோர் செய்திருந்தனர்.