/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உப்பட்டியில் அறிவியல் திருவிழா; ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்
/
உப்பட்டியில் அறிவியல் திருவிழா; ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்
உப்பட்டியில் அறிவியல் திருவிழா; ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்
உப்பட்டியில் அறிவியல் திருவிழா; ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்
ADDED : ஜன 08, 2025 10:27 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே உப்பட்டி பஜாரில் அறிவியல் திருவிழா நடந்தது.
உப்பட்டி கிளை தலைவர் சுலோக்சனா வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் எளிய பரிசோதனை முறையில் அறிவியல் கண்டுபிடிப்புகளை, கண்டுபிடிப்பது குறித்து வானவில் மன்ற கருத்தாளர்கள் ஷாலினி மற்றும் அர்ச்சனா செயல் விளக்கம் அளித்தனர்.
இதில், 'அன்றாட வாழ்வில் அறிவியல் மற்றும் கணிதத்தின் பயன்பாடுகள்; வீட்டில் உபயோகிக்கும் பொருட்கள் கொண்டு எளிய முறையில் பரிசோதனை செய்வது; மந்திரமா, தந்திரமா நிகழ்வு, லாக்டோ மீட்டர் பயன்பாடு மற்றும் இடது கை பழக்கம் உள்ளவர்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து, ஆர்வத்துடன் பங்கேற்றத்துடன் ஒரு சில செயல் விளக்கங்களை மாணவர்களை செய்து காட்டினர். மாணவி பிரீத்தி நிகழ்ச்சியின் பயன்கள் குறித்து பேசினார்.
உப்பட்டி சுற்று வட்டார பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.