/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி பார்மசி கல்லுாரியில் அறிவியல் தொடர்பான கருத்தரங்கு
/
ஊட்டி பார்மசி கல்லுாரியில் அறிவியல் தொடர்பான கருத்தரங்கு
ஊட்டி பார்மசி கல்லுாரியில் அறிவியல் தொடர்பான கருத்தரங்கு
ஊட்டி பார்மசி கல்லுாரியில் அறிவியல் தொடர்பான கருத்தரங்கு
ADDED : ஜூலை 18, 2025 09:04 PM

ஊட்டி; ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரியில், 'உயிர் கெமிக்கல் அறிவியல் தொடர்புகளின் கலை' என்ற தலைப்பில் கருத்தரங்கு துவங்கியது.
ஜெ.எஸ்.எஸ்., உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் உறுப்பு கல்லுாரியான, ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரியில், ஆராய்ச்சி ஆய்வு கட்டுரைகள் திட்டங்கள் மற்றும் காப்புரிமைகள் குறித்த திறமையான எழுத்து பயிற்சி; உயிர்கெமிக்கல் அறிவியல் தொடர்புகளின் கலை என்ற தலைப்புகளில், இரண்டு நாள் கருத்தரங்கு துவங்கியது.
'உயிர் கெமிக்கல்' துறையில் உள்ள இளம் ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.
ஒருங்கிணைப்பாளர் கவுதம ராஜன் வரவேற்றார். கல்லுாரி துணை முதல்வர் அருண் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜவஹர் கருத்தரங்கின் விளக்க உரை அளித்தார்.
தலைமை விருந்தினராக பங்கேற்ற டாக்டர் சந்திரசேகர், 'திறமையான ஆராய்ச்சி பரப்புரையின் முக்கியத்துவம்,' குறித்து எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில், பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆய்வாளர்கள், தலைமை உரையாசிரியர்கள் என, 150 பேர் பங்கேற்றனர்.