/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோளரங்கத்தில் திரை விளக்கம்: மாணவர்கள் வியப்பு
/
கோளரங்கத்தில் திரை விளக்கம்: மாணவர்கள் வியப்பு
ADDED : ஆக 26, 2025 09:35 PM

கூடலுார்; கூடலுார், புளியாம்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் கோளரங்கம் மூலம், கோள்கள் இயக்கம், வானிலை மாற்றம் குறித்து மாணவர்களுக்கு, திரை வடிவிலான விளக்கம் அளிக்கப்பட்டது.
கூடலுார் புளியம்பாறை அரசு பள்ளி மாணவர்களுக்கு, கோள்கள் இயக்கம், வானிலை மாற்றங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கோள வடிவிலான பூமி பந்து போல் அமைக்கப்பட்ட திரை வடிவமான, கோளரங்கம் அமைக்கப்பட்டது. இதற்கான துவக்க நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் தலைமை வகித்து, கோள்கள், வானியல் மாற்றங்கள் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து, கோளரங்கத்துக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதனுள், வானியலில் நட்சத்திரங்கள், அவற்றின் நகர்வுகள்; சூரிய குடும்பத்தின் தோற்றம்; கோள்கள் செயல்பாடுகள்; புவியியல் மாற்றங்கள் திரையில் பார்த்து, புரிந்து கொண்டனர்.
மாணவர்கள் கூறுகை யில், 'கோள்கள் செயல்பாடுகள், வானிலை மாற்றங்கள் குறித்து, கோளரங்கத்தினுள், திரை வடிவில் பார்ப்பது, வானத்தில் நேரடியாக பார்த்த உணர்வையும், புரிதலையும் ஏற்படுத்தியது. எங்களை போன்ற பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு, இவை பயனுள்ளதாக இருந்தது,' என்றனர்.