ADDED : மார் 09, 2024 07:19 AM

அ நிறம் | அளவு
குன்னுார் : குன்னுாரில் குடிபோதையில் பழங்குடியின தம்பதியை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலை கோழிக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம்,38. குடிபோதையில் அருகில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதே பகுதியை சேர்ந்த, விநாயகன், நாகமணி தம்பதியினரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு, அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த இருவரும், கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குன்னுார் இன்ஸ்பெக்டர் சதீஷ், எஸ்.ஐ., கனகராஜ் விசாரணை நடத்தி, ராஜலிங்கத்தை கைது செய்தனர்.
குன்னுார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கிளை சிறையில் அடைத்தனர்.
