/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு 'சீல்'
/
எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு 'சீல்'
ADDED : மார் 20, 2024 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : லோக்சபா தேர்தலை ஒட்டி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததால், துடியலூரில் உள்ள கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அலுவலகத்தை பூட்டி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
துடியலூர் வெள்ளக்கிணறு ரோட்டில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, எம்.எல்.ஏ., அலுவலகத்தின் கதவு மற்றும் வாயில் பகுதிகள் மூடப்பட்டு முன்புறமுள்ள மெயின் கேட் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதே போல பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி, ஒன்றிய சேர்மன் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.----

