/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் இரண்டாம் சீசன் துவக்கம்; சுற்றுலா பயணிகள் வியப்பு
/
ஊட்டியில் இரண்டாம் சீசன் துவக்கம்; சுற்றுலா பயணிகள் வியப்பு
ஊட்டியில் இரண்டாம் சீசன் துவக்கம்; சுற்றுலா பயணிகள் வியப்பு
ஊட்டியில் இரண்டாம் சீசன் துவக்கம்; சுற்றுலா பயணிகள் வியப்பு
ADDED : அக் 01, 2025 08:25 AM

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் செப்., அக்., மாதங்களில் இரண்டாம் சீசன் நடக்கிறது. இதற்காக, ஊட்டி தாவரவியல் பூங்கா அலங்கார மேடைகளில், 'இன்கா மேரி கோல்ட், பேன்சி, பெட்டூனியா, ஜனியா, லில்லியம், அஜிரேட்டம், காலண்டூலா, ஹெலிக்கிரேசம், சப்னேரியா,' உட்பட, 55 வகைகளில், 5,000 மலர் தொட்டிகளில் பல வண்ண மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தவிர, கண்ணாடி மாளிகை, இத்தாலியன் கார்டன் மற்றும் பூங்கா பாத்திகளில், 270 ரகங்களில், 5 லட்சம் மலர் செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.
போக்குவரத்தில் மாற்றம் நீலகிரி எஸ்.பி., நிஷா அறிக்கை: சுற்றுலா பயணிகள் குன்னுார் மார்க்கமாக ஊட்டிக்கு வந்து பயணத்தை முடித்து செல்லும்போது, கோத்தகிரி வழியாக ஒரு வழி பாதையில் செல்ல வேண்டும். குன்னுார் வழியாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பஸ்கள் மற்றும் மினி பஸ்கள், ஆவின் பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு, மாவட்ட நிர்வாக சார்பில் ஏற்பாடு செய்யப்படும், 'சர்கிள்பஸ்' வாயிலாக சுற்றிப் பார்த்துவிட்டு செல்ல வேண்டும்.
கூடலுார் வழியாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பஸ்கள் மற்றும் மினிபஸ்கள், எச்.பி.எப்., பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடத்திலும் கோத்தகிரி வழியாக, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பஸ்கள் தொட்டபெட்டா பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு, 'சர்கிள்பஸ்' வாயிலாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டும்.
கனரக வாகனங்களுக்கு காலை, 8:00 மணி முதல் மாலை, 2:00 மணி வரை. ஊட்டி நகரம், குன்னுார் மற்றும் கூடலுார் நகருக்குள் எக்காரணம் கொண்டும் அனுமதி இல்லை. இந்த போக்குவரத்து மாற்றமானது, 1ம் தேதி (இன்று) முதல் அக்., 5ம் தேதி வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.