/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுதந்திர தின விழா பாதுகாப்பு பணிகள் தீவிரம்: குன்னுார், ஊட்டி ரயில் நிலையங்களில் சோதனை

ADDED : ஆக 14, 2025 08:08 PM

குன்னுார்: குன்னுார்-- ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் -ஊட்டி இடையே, இயக்கப்படும் மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஏற்கனவே, மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே வார இறுதி நாட்களில், வெள்ளி முதல் திங்கள் கிழமை வரை, சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும், ஊட்டி-குன்னுார் மற்றும் ஊட்டி- கேத்தி இடையே, இன்று முதல், 17ம் தேதி வரை, விடுமுறை தின சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதில், 'ஆன்லைனில் முன்பதிவு மட்டுமின்றி, முன்பதிவு செய்யாத பெட்டிகளும் இயக்கப்படுவதால், சுற்றுலா பயணிகள் எளிதாக டிக்கெட் வாங்கி பயணம் மேற்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்திருந்தது.
இந்நிலையில், சுதந்திர தின விழாவையொட்டி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரயில்வே போலீசார் சார்பில், குன்னுார் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., ருக்மணி தலைமையில் போலீசார், சுற்றுலா பயணிகளின் லக்கேஜ்களில், மெட்டல் டிடெக்டர் வாயிலாக சோதனை மேற்கொண்டனர். இதேபோல, ஊட்டி ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு நடவடிக்கையாக சோதனை நடந்து வருகிறது.