/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேலாஸ் கவுரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சேலாஸ் சுற்றுப்புற கிராம மக்கள் பிரார்த்தனை

ADDED : மே 13, 2025 10:51 PM

குன்னுார், ; குன்னுார் அருகே சேலாஸ் கவுரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.
குன்னுார் சேலாஸ் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மகா கவுரி மாரியம்மன் கோவில் மற்றும் மாரியம்மன், அரசமர விநாயகர், மகாமுனீஸ்வரர் தெய்வங்களின் திருப்பணிகள் நிறைவு பெற்றது. கடந்த, 9ல், துவங்கிய கும்பாபிஷேக விழாவில், மகா கணபதி ஹோமம், குபேர மகாலட்சுமி, மகா மிருத்யுஞ்சயம், நவநாயகர்கள், மகா அஸ்திரம் பெற்ற தெய்வங்களை கும்ப ரூபமாக அழைத்து வரப்பட்டு, மூல மந்திர, மகா திரவ்ய யாகம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.
10 ம் தேதி மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பக்தர்கள், அம்பாள் சேவா மகளிரணி, ஊர் மக்கள் சார்பில், கருப்பண்ண சுவாமி கோவில் ஆற்றங்கரையிலிருந்து அபிஷேக குடம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, 11ம் தேதி கோவில் கோபுர விமானம் மற்றும் கருவறை தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, கோவை ஈசன் கலை கூடத்தினரின் பரதநாட்டியம், கோவை குழுவினரின் வள்ளி கும்மி, வாகன ஓட்டுநர்கள் சார்பில் அன்னதானம், கட்டட ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டட தொழிலாளர்கள் சார்பில் இன்னிசை,, மகளிர் அணியினரின் சீர்வரிசை கொண்டு வரும் நிகழ்ச்சிகள் நடந்தது. சேலாஸ் ரோமன் கத்தோலிக்க பங்கு தந்தை ஜான் சார்லஸ் மற்றும் ஜமாத் சார்பில் மஜீத் ஆகியோர் பங்கேற்றனர்.
சேலாஸ் சுற்றுப்புற கிராம மக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.