/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண்கள் முன்னேற சுய வேலை வாய்ப்பு முக்கியம்
/
பெண்கள் முன்னேற சுய வேலை வாய்ப்பு முக்கியம்
ADDED : ஏப் 28, 2025 11:28 PM

பந்தலுார், ; பந்தலுாரில், ஏகல் அபியான் சார்பில் இலவச தையல் பயிற்சி நிறைவு செய்த பெண்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடந்தது.
தையல் பயிற்சி ஆசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார்.
மாநில பொறுப்பாளர் ராமன் தலைமை வகித்தார். மாநில தலைவர் மருத்துவர் கிருத்திகா கிருஷ்ண பிரசாத் பேசுகையில், ''பெண்கள் சுய தொழில் செய்து, குடும்பத்தை காப்பாற்றும் நிலைக்காவது உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், இதுபோன்ற பெண்கள் பொருளாதார மையங்கள் செயல்படுத்தப்படுகிறது. இங்கு தையல் பயிற்சி பெற்ற பெண்கள் சுயமாக தொழில் செய்து முன்னேற்றம் காண வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து பயிற்சி நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிர்வாகிகள் சேஷாத்ரி,சங்கர் தீட்சித், மனோஜ்குமார்,செல்வகுமார், தினேஷ்குமார், அம்பிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காளிதாஸ் நன்றி கூறினார்.

