ADDED : பிப் 08, 2024 10:33 PM

மேட்டுப்பாளையம் - ஜடையம்பாளையம் ஊராட்சியில் மகளிருக்கு, சுயதொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.
காரமடை ஊராட்சி ஒன்றியம் ஜடையம்பாளையம் ஊராட்சி, 12 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவிற்கு, சுயதொழில் பயிற்சி அளிக்க, ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையமும், மகளிர் திட்டமும் இணைந்து, சுயதொழில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தது. இதில், 20க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, பயிற்சியை துவக்கி வைத்தார். பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கணேசன், மகளிர் கூட்டமைப்பு கணக்காளர் லத்திகா தேவி, பயிற்சியாளர் தீபிகா, மகளிர் குழு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, ஊராட்சி செயலர் நந்தினி ஆகியோர் பங்கேற்றனர். மகளிருக்கு மசால் பொடி, இட்லி பொடி உள்பட, 13 வகை பொடிகள் தயாரிக்கும் பயிற்சியை அளித்தனர்.

