ADDED : ஜன 07, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;-போரில் அனாதையான குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரியில் பிரெஞ்ச் துறை சார்பில் 'போரும், மனித வாழ்வும் ' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
சிறப்பு விருந்தினராக பெங்களூர் ஜோதி நிவாஸ் கல்லூரி பிரெஞ்ச் துறை பேராசிரியர் ஹெனாக் தலைமை வைத்து, போரின் விளைவுகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை குறித்து பேசினார்.
கல்லூரி பேராசிரியை டாக்டர் ஷீலா, முதன்மை பேராசிரியை ஹேமா ஸ்ரீகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். பிரெஞ்ச் பேராசிரியை சிந்தியா ஜார்ஜ் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.