/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாரம்பரிய உணவும் -சுற்றுச்சூழலும் விவசாயிகள் பங்கேற்ற கருத்தரங்கு
/
பாரம்பரிய உணவும் -சுற்றுச்சூழலும் விவசாயிகள் பங்கேற்ற கருத்தரங்கு
பாரம்பரிய உணவும் -சுற்றுச்சூழலும் விவசாயிகள் பங்கேற்ற கருத்தரங்கு
பாரம்பரிய உணவும் -சுற்றுச்சூழலும் விவசாயிகள் பங்கேற்ற கருத்தரங்கு
ADDED : ஆக 29, 2025 09:17 PM

கோத்தகிரி; கோத்தகிரி மிளிதேன் கிராமத்தில், சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில், 'பாரம்பரிய உணவும் சுற்றுச்சூழலும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கிராம தலைவர் போஜன் தலைமை வகித்தார்.
சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் மைய கள அலுவலர் குமாரவேலு பேசுகையில், ''பாரம்பரிய உணவு பயிரிட்டு உண்டு வந்து நிலையில், நீலகிரி செழிப்பான பகுதியாக இருந்தது. தற்போது, பண பயிர்களின் தாக்கம் அதிகரித்து, பாரம்பரிய உணவுகள் மறைந்து போகும் நிலைக்கு வந்துள்ளது. இதனை சரி செய்ய, விவசாயிகள் கூடுமான வரை சிறுதானியங்களை பயிரிட வேண்டும்,'' என்றார்.
இயற்கை அலுவலர் சிவன், 'உணவே மருந்து, என்ற தலைப்பில் பேசியதுடன், பாரம்பரிய உணவுகளான, சாமை, ராகி மற்றும் கீரை ஆகியவற்றை சமைத்து உண்பதன் அவசியம் குறித்து, செயல் விளக்கம் அளித்தார்.
இயற்கை விவசாயி ராம்தாஸ், விஷம் இல்லாமல், இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிப்பது குறித்து பேசினார். மினிதேன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.இயற்கை விவசாயி பேபி கென்னடி நன்றி கூறினார்.