/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்; பழங்குடியினருக்கு அறிவுரை
/
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்; பழங்குடியினருக்கு அறிவுரை
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்; பழங்குடியினருக்கு அறிவுரை
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்; பழங்குடியினருக்கு அறிவுரை
ADDED : மே 04, 2025 09:37 PM
கூடலுார்; 'குழந்தை திருமணத்தை தடுக்க, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்,' என, கூடலுார் கொத்தாடி பழங்குடி கிராமத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடலுார் தேவர்சோலை அருகே, கொத்தாடி பழங்குடியினர் கிராமத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், குழந்தை திருமணம் தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமுக்கு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் தவமணி தலைமை வகித்து பேசுகையில், ''பழங்குடியினர் கல்வி கற்பதன் மூலம் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பழங்குடி மாணவர்கள், பள்ளி இடைநிற்றலை தவிர்க்க பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதால், குழந்தை திருமணங்கள் தடுக்கப்படும். குழந்தை பள்ளிக்கு செல்லாமல், வீடுகளில் தனியாக விட்டு சென்றால், அவர்கள் பல வகைகளும் பாதிக்கப்படுவர். இதனைத் தவிர்க்க வேண்டும்,'' என்றனர்.