நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: -நீலகிரி மூத்தோர் மாவட்ட தடகள விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் நவ., 5 முதல், 9ம் தேதி வரை, சென்னையில் நடக்கும் தெற்காசியா விளையாட்டு போட்டியில் பங்கேற்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து, காரி, திவாகரன், ஹேமலதா, பிரபாகரன், பாலு, சங்கீதா, குப்புசாமி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் சமயன் ஆகியோர் பங்கேற்கின்றனர். போட்டியில், 28 நாடுகள் பங்கேற்கின்றன.
நீலகிரியில் இருந்து, போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற இவர்களை, மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் காரி மற்றும் செயலாளர் திவாகரன் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள், வாழ்த்தி வழி அனுப்பினர்.

