/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மூத்த குடிமக்கள் நல சட்டம்: ஒரு நாள் பயிற்சி முகாம்
/
மூத்த குடிமக்கள் நல சட்டம்: ஒரு நாள் பயிற்சி முகாம்
மூத்த குடிமக்கள் நல சட்டம்: ஒரு நாள் பயிற்சி முகாம்
மூத்த குடிமக்கள் நல சட்டம்: ஒரு நாள் பயிற்சி முகாம்
ADDED : ஜன 07, 2024 11:24 PM
ஊட்டி:ஊட்டியில், சமூக நலத்துறை சார்பில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் சட்டம் தொடர்பாக, ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
கலெக்டர் அருணா முகாமை துவக்கி வைத்தார். இச்சட்டத்தின் கீழ், மேல்முறையீட்டு அலுவலராக கலெக்டர், பராமரிப்பு அலுவலராக மாவட்ட சமூகநல அலுவலர், ஒவ்வொரு கோட்டங்களில் ஆர்.டி.ஓ.,க்கள் தலைவர்களாக கொண்டு, தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டது.
பயிற்சி முகாமில், இலவச சட்ட உதவி மையம் சார்பாக வக்கீல்கள் பங்கேற்று, மூத்த குடிமக்கள் நல சட்டம் - 2007, தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நல விதிகள் - 2009 மற்றும் மூத்த குடிமக்கள் உதவி எண், 14567 தொடர்பாக, விரிவான விளக்கத்துடன் எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, டி.ஆர்.ஓ., கள் மகராஜ், பூஷ்ணகுமார், குதரதுல்லா உட்பட வக்கீல்கள், தன்னார்வலர்கள் பலர் பங்கேற்றனர்.