/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுத்தையிடம் சிக்கி தப்பிய நாய் காட்டெருமை குத்தியதால் 'சீரியஸ்' குன்னுார் நகரில் வனத்துறை கண்காணிப்பு அவசியம்

ADDED : ஜன 21, 2025 10:06 PM
குன்னுார், ; குன்னுார் நகரில் சிறுத்தையிடம் சிக்கிய நாய் காயத்துடன் தவித்த நிலையில், காட்டெருமையும் குத்தியதால் உயிருக்கு போராடி வருகிறது.
குன்னுார் அந்தோணியார் தேவாலயம் பகுதியில் நாய்கள் அதிகளவில் உள்ளன.
இப்பகுதியில், ரத்தம் வெளியேறி தவித்து கொண்டிருந்த நாயை பார்த்த, பள்ளி மாணவி ஒருவர் அளித்த, தகவலின் பேரில், விலங்குகள் வதை தடுப்பு சங்கத்தினர், ஆட்டோ ஆம்புலென்சில், ஊட்டி கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
அதில், நாயின் கழுத்தில் சிறுத்தை கடித்ததாலும், காட்டெருமை காலில் குத்தியதாலும் படுகாயமடைந்தது தெரியவந்தது. உயிருக்கு போராடி வரும் நாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் கூறுகையில், 'அந்தோணியார் தேவாலயம், மேரீஸ் பள்ளி, கான்வென்ட் பள்ளி உட்பட நகரின் மைய பகுதியில், அமைந்துள்ள இந்த இடத்தில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
தற்போது, இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டமும் உள்ளதாக கூறி வந்த நிலையில், நாயை சிறுத்தை தாக்கியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறையினர் இந்த பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்,' என்றனர்.