ADDED : ஜன 25, 2024 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் மங்களக்கரை புதூரில் வீரசென்னியம்மன் கோவில் உள்ளது. அருகில் உள்ள கெண்டேபாளையம், மருதூர், ராமகவுண்டன் புதூர், கீரணத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
கோவில் முன் தென்னை ஓலையில் பந்தல் அமைத்து, அதன் மேல் தகர சீட் அமைக்கப்பட்டுள்ளது.இதனிடையே நேற்று அதிகாலை மர்ம நபர்கள் இந்த பந்தலுக்கு தீ வைத்தனர். இதில் பந்தல் ஓலைகள் எரிந்து, சேதமடைந்தது.
இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பந்தலுக்கு தீ வைத்தது யார் என்று காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.--