/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
லோக் அதாலத்தில் 846 வழக்குகளுக்கு தீர்வு
/
லோக் அதாலத்தில் 846 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : மார் 12, 2024 01:17 AM
ஊட்டி:ஊட்டியில் நடந்த லோக் அதாலத்தில், 846 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.
இதை சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான அப்துல் காதர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் லிங்கம் முன்னிலை வகித்தார். அதில், தண்ணீர் மின்சார கட்டணம் தொடர்பான வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் தொழிலாளர், சம்பந்தப்பட்ட வழக்குகள் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதேபோல், கோத்தகிரி, குன்னுார், கூடலுார் மற்றும் பந்தலுார் ஆகிய நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. பொதுமக்கள், வங்கி மேலாளர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

