/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் கடும் குளிர்: படகு இல்லம் 'வெறிச்'
/
ஊட்டியில் கடும் குளிர்: படகு இல்லம் 'வெறிச்'
ADDED : ஜூன் 27, 2025 09:20 PM

ஊட்டி; ஊட்டியில் மழையுடன் கடும் குளிர் நிலவியதால், படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டது.
ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மற்றும் படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் நாள்தோறும், கணிசமாக சுற்றுலா பயணிகளின் வருகை இருந்து வருகிறது.
குறிப்பாக, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஏரியில் படகு சவாரி செய்து குதுாகலத்துடன் பொழுதை கழித்து வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக, ஊட்டி உட்பட, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
அத்துடன், குளிரான காலநிலை நிலவுகிறது. இதனால், ஊட்டிக்கு குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா வந்த பயணிகள் பலர், விடுதி அறைகளில் முடங்கியதால், படகு இல்லம் வெறிச்சோடி காணப்பட்டது.