/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலமூர் சாலையில் கழிவுநீர்; மாணவர்கள் செல்வதில் சிரமம்
/
சாலமூர் சாலையில் கழிவுநீர்; மாணவர்கள் செல்வதில் சிரமம்
சாலமூர் சாலையில் கழிவுநீர்; மாணவர்கள் செல்வதில் சிரமம்
சாலமூர் சாலையில் கழிவுநீர்; மாணவர்கள் செல்வதில் சிரமம்
ADDED : அக் 28, 2024 11:29 PM

குன்னுார் : கேத்தி பாலாடா -சாலமூர் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பள்ளி மாணவ, மாணவியர் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
குன்னுார் தாலுகாவுக்கு உட்பட்ட கேத்தி பேரூராட்சியில் உள்ள சாலமூர் கிராமத்தில், 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு சாலையை சீரமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில் ஆங்காங்கே பெரிய குழி ஏற்பட்டு வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது.
இந்த சாலையில் செல்லும் கழிவுநீர் பல இடங்களிலும் தேங்கி நிற்கிறது. இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். துர்நாற்றமும் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து, கேத்தி பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி, கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன், மழை நீர் கால்வாய் அமைத்து, சாலையை செப்பனிட வேண்டும்.