/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சொக்கம்பாளையத்தில் கழிவுகளால் மாசுபடும் குளம்
/
சொக்கம்பாளையத்தில் கழிவுகளால் மாசுபடும் குளம்
ADDED : ஜன 10, 2024 11:48 PM
அன்னுார் : சொக்கம்பாளையம் குளத்தில், கோழி கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அன்னுார் பேரூராட்சி, சொக்கம்பாளையத்தில், எட்டு ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த மாதம் பெய்த மழையால், 50 சதவீதம் நீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கோழி கழிவுகள் அடங்கிய மூட்டைகளை குளத்தில் வீசி விட்டு செல்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இறந்த கோழிகள் மற்றும் கோழி கழிவுகளை மூட்டைகளில் கட்டி, குளத்தின் கரையை ஒட்டி வீசி உள்ளனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குளத்தில் உள்ள நீர் மாசுபடுகிறது.
குளக்கரையை ஒட்டி அரசு மாணவ மாணவியரின் மூன்று விடுதிகள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இங்கு தங்கி உள்ளனர். கோழி கழிவுகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, குளத்தில் கோழி கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி நிர்வாகம் அவற்றை அகற்ற வேண்டும்,' என்றனர்.