தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பழங்குடியின பெண்களுக்கு தையல் பயிற்சி

 பழங்குடியின பெண்களுக்கு தையல் பயிற்சி

 பழங்குடியின பெண்களுக்கு தையல் பயிற்சி


ADDED : மார் 22, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 07:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலூர்: பந்தலூர் அருகே கையுன்னி பகுதியில், பழங்குடியின பெண்களுக்கு தையல் பயிற்சி மையம் துவக்கி வைக்கப்பட்டது.

பந்தலூர் அருகே, கையுன்னி பி.ஆர்.எப். காலனியில், நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் மற்றும் சீக் பவுண்டேஷன் இணைந்து, பழங்குடியின பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி மையத்தை துவக்கி உள்ளனர்.

இதன் துவக்க விழா நிகழ்ச்சியில், பி.ஆர்.எப். காலனி திட்ட மேலாளர் விஜயா வரவேற்றார்.

சேரம்பாடி வனவர் லூயிஸ் பயிற்சி மையத்தை துவக்கி வைத்து பேசுகையில், பழங்குடியின மக்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பழங்குடியின பெண்கள் மற்றும் இளையோர்கள் பயன்பெறும் வகையில், பயிற்சி மற்றும் கடனுதவிகள் வழங்கப்படும் நிலையில், அதனைப் பெற்று பயன்பெற முன் வரவேண்டும்.

தையல் தொழில் என்பது சுயமாக முன்னேறுவதற்கான ஒரு வழியாக உள்ளதுடன், நல்ல வருவாய் தரும் தொழிலாகவும் உள்ளதால், பழங்குடியின பெண்கள் இதனை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும்.'' என்றார்.

முதல் கட்டமாக, 23 பெண்களுக்கு பயிற்சி துவக்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், டாக்டர் சரிதா, வனக்காப்பாளர் குணசேகரன், வனக்காவலர் லட்சிய தீபன், பழங்குடியின இளையோர் பயிற்சியாளர் செரில் ஜோசப், பழங்குடியின தலைவர் குளியன் மற்றும் பழங்குடியின பெண்கள் பங்கேற்றனர்.

தையல் பயிற்சி ஆசிரியை கஸ்தூரி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us