/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; 'போக்சோ'வில் டிரைவர் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; 'போக்சோ'வில் டிரைவர் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; 'போக்சோ'வில் டிரைவர் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; 'போக்சோ'வில் டிரைவர் கைது
ADDED : செப் 18, 2024 08:54 PM
ஊட்டி : பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதி அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர். சிறுமியின் தந்தையின் நண்பரான, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொக்லைன் வாகன டிரைவர் சேகர்,44, என்பவர், கடந்த, 15ம் தேதி அவரை தேடி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, சிறுமியர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.
இரண்டாவது சிறுமியை பிஸ்கட் வாங்க அருகில் உள்ள கடைக்கு அனுப்பிய சேகர், 10 வயதான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறி உள்ளார். பெற்றோர், ஊட்டி ரூரல் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார், போக்சோ சட்டத்தில் சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.