/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 8 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 8 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 8 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 8 ஆண்டு சிறை
ADDED : ஜன 31, 2024 10:18 PM
ஊட்டி: ஊட்டி அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு, 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஊட்டி மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே கிராம பகுதியை சேர்ந்தவர் சிவானந்தன், 62, தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவர் கிராம மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த, 5 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிறுமி சப்தம் போட்டு அழுதுள்ளார். சப்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு சென்று சிறுமியை மீட்டு, சிவானந்தனை பிடித்து ஊட்டி ரூரல் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை மேற்கொண்டு, 'போக்சோ' சட்டத்தில், வழக்கு பதிவு செய்து, கடந்த, 2021ம் ஆண்டு மே 14ம் தேதி சிவானந்தனை கைது செய்தனர். மேலும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வழக்கு விசாரணை கடந்த, 3 ஆண்டுகளாக ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவானந்தனுக்கு, 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார்.
வழக்கில் அரசு சிறப்பு வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார். சிவானந்தனை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.