/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாலியல் தொல்லை; ஆசிரியர் தலைமறைவு
/
பாலியல் தொல்லை; ஆசிரியர் தலைமறைவு
ADDED : ஆக 16, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலூர்; நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள, பழங்குடியின அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலருக்கு அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில், சைல்டு லைன் ஊழியர்கள் விசாரணை மேற்கொண்டு, கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அறிந்த ஆசிரியர் தலைமறைவானதை அடுத்து, போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் கூடலுாரில் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.