/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மர்மமான முறையில் இறந்த ஆடுகள்: அச்சத்தில் மக்கள்
/
மர்மமான முறையில் இறந்த ஆடுகள்: அச்சத்தில் மக்கள்
ADDED : மார் 16, 2025 11:34 PM
கூடலுார்; கூடலுார் அருகே, மர்மமான முறையில் மூன்று ஆடுகள் இறந்ததுடன், ஒரு ஆடு காணாமல் போன சம்பவத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுார், புத்துார் வயல் அருகே, ஏச்சம்வயல் பகுதி யை சேர்ந்தவர் சத்தியன்,48. இவர், தனது நான்கு ஆடுகளை வயலில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தார்.
மாலை, சென்று பார்த்த போது மூன்று ஆடுகள் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தன. ஒரு ஆட்டை காணவில்லை.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வன ஊழியர்கள் ஆட்டின் உடல்களை ஆய்வு செய்தனர். உடல்களை, ஆவின் கால்நடை டாக்டர் டேவிட் பிரேத பரிசோதனை செய்தார்.
வனத்துறையினர் கூறுகையில், 'மாமிச உண்ணி தாக்கி ஆடுகள் இறந்திருக்க வாய்ப்புள்ளது. கண்காணிக்கப்படும். உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'புலி அல்லது சிறுத்தை தாக்கி ஆடுகள் இருந்திருக்கலாம். மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, அப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணிக்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க வன ஊழியர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்,' என்றனர்.