/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிவன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
சிவன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
சிவன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
சிவன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 07, 2025 08:28 PM

பந்தலுார்; பந்தலுார் எருமாடு சிவன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.
பந்தலுார் அருகே எருமாடு வெட்டுவாடி, பகுதியில் பழமை வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், கடந்த, 2016ல் பிரபல வாஸ்து சிற்பி பிரம்மஸ்ரீ காணிப்பையூர் குட்டன் நம்பூதிரி என்பவர் வாயிலாக, புனரமைப்பு பணிகள் துவங்கியது. தற்போது, கோவிலின் புனர்நிர்மாண பணி நிறைவடைந்தது.
தொடர்ந்து, கடந்த, 3-ம் தேதி அபிஷேக பூஜை நடைதிறப்பு உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. பல்வேறு பூஜைகள் ஆன்மிக சொற்பொழிவு, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
நேற்று காலை, 5:00 மணிக்கு நடைதிறப்பு, அபிஷேகம், மலர் நிவேத்தியம், கணபதி ஹோமம், கனி காணல், கலச பூஜை நடந்தது. பகல், 12:00 மணி முதல் 1:00 மணி வரை, தேவபிரதிஷ்டை செய்யப்பட்டு, கலச குடம் பிரதிஷ்டை, நித்திய நிதானம், நடைதிறப்புடன் கும்பாபிஷேக விழா நடந்தது.
கும்பாபிஷேக பூஜைகளை தந்திரி பிரம்மஸ்ரீ சசிதரன் நம்பூதிரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். கோவில் பூஜைகளை சுவாமி கார்த்திக் தலைமையிலான குழுவினர் செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டதுடன், கோலாட்டம், திருவாதிரை நிகழ்ச்சிகளும் நடந்தது. இரவு நடந்த நிகழ்ச்சியில் சுவாமி ஹம்சானந்தபுரி ஆன்மிக அருளாசி வழங்கினார். தொடர்ந்து, இசை நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா தங்கவேலு, தலைவர் பாஸ்கரன், செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் கேசவன், திருவிழா கமிட்டி கன்வீனர் சசிதரன் உட்பட பலர் மேற்கொண்டனர்.