/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிவராத்திரி திருவிழா ஊர்வலம்; 'ரோபோட்டிக்' யானை பங்கேற்பு
/
சிவராத்திரி திருவிழா ஊர்வலம்; 'ரோபோட்டிக்' யானை பங்கேற்பு
சிவராத்திரி திருவிழா ஊர்வலம்; 'ரோபோட்டிக்' யானை பங்கேற்பு
சிவராத்திரி திருவிழா ஊர்வலம்; 'ரோபோட்டிக்' யானை பங்கேற்பு
ADDED : மார் 09, 2024 07:35 AM

கூடலுார் : கூடலுார் தேவர்சோலை, ஸ்ரீ சங்கரன்கோவில் மகா சிவராத்திரி தேர் திருவிழாவில், முதல் முறையாக 'ரோபோட்டிக்' யானை பங்கேற்று பக்தர்களை பரவசப்படுத்தியது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை ஸ்ரீசங்கரன் கோவில் சிவராத்திரி திருவிழா, நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 7:50 மணிக்கு தீபம் விளக்கு ஏற்றுல் நிகழ்ச்சி நடந்தது. 8:00 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 7:00 மணிக்கு செண்டை மேளத்துடன், பூக்காவடி ஆட்டத்துடன் தேர் ஊர்வலம் துவங்கியது.
ஊர்வலத்தில், பெண்கள் தாலப்பொலி எடுத்து பங்கேற்றனர். அதில், முதல்முறையாக, 'ரோபோட்டிக்' யானை பங்கேற்று பக்தர்களை பரவசப்படுத்தியது. ஊர்வலம், அரசு மேல்நிலைப்பள்ளி வரை சென்று கோவிலை வந்து அடைந்தது.
யானையை பார்த்து உள்ளூர் மக்கள்; குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.