ADDED : செப் 09, 2025 09:53 PM
கூடலுார்; கூடலுார், பந்தலுார் பகுதிகளில் நாளை (11ம் தேதி) வியாபாரிகள் சங்கம் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
கூடலுார் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் ரசாக் வெளியிட்டு அறிக்கை:
கூடலுார் தொகுதியில், வனவிலங்குகளால், மக்கள்பாதிக்கப்படுவதை தடுக்கவும், மனித-விலங்கு மோதலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதி அருகே குடியிருப்புகளை ஒட்டி அகழி மற்றும் மின்வேலி அமைக்க வேண்டும்.
பந்தலுார் நகரில் கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை அமைக்க வேண்டும். இப்பிரச்னைகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 11ம் தேதி காலை, 6:00 மணி முதல், 24 மணி நேரம் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். போராட்டத்திற்கு அனைத்து வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் சங்கங்கள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.