ADDED : மார் 20, 2024 10:22 PM
சூலுார் : வாடகை செலுத்தாத காரணத்தால், சூலுார் பஸ் ஸ்டாண்டில் செயல்பட்ட ஓட்டலை பூட்டி, பேரூராட்சி நிர்வாகம் சீல் வைத்தது.
சூலுார் புது பஸ் ஸ்டாண்டில், 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பஸ் ஸ்டாண்டில், ஓட்டல், ஜுஸ் கடை, டீக்கடை உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு செயல்பட்டு வந்த ஓட்டலை ஏலம் எடுத்தவர், வாடகை தொகையை பல மாதங்களாக செலுத்தவில்லை என, கூறப்படுகிறது. பலமுறை அறிவுறுத்தியும் வாடகை தொகையை செலுத்தாத காரணத்தால், பேரூராட்சி நிர்வாகம் ஓட்டலை பூட்டி, சீல் வைத்தது.
'பல லட்சங்கள் செலுத்தி கடைகளை ஏலம் எடுத்துள்ளோம். பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் வராமல் ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால், பஸ் ஸ்டாண்டுக்குள் பயணிகள் யாரும் வருவதில்லை. அதனால், வியாபாரமே நடக்காமல் நஷ்டமடைந்துள்ளோம்.
பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்ல உரிய நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும்' என, வியாபாரிகள் கூறினர்.

