/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு 'சீல்'
/
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு 'சீல்'
ADDED : ஜன 30, 2025 09:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்; கூடலுார் ஓவேலி, சூண்டி மரப்பாலம் பகுதியை சேர்ந்த புண்ணியமூர்த்தி,62, என்பவரின் கடையில் நியூஹோப் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அவர் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அதனை போலீசார் பரிந்துரை செய்து வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து, கடைக்கு 'சீல்' வைக்க உணவு பாதுகாப்பு துறைக்கு பரிந்துரை செய்தனர். நியூஹோப் எஸ்.எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் முன்னிலையில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சிவராஜ், கடைக்கு 'சீல்' வைத்தார்.

