/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடைகளில் சோதனை; பிளாஸ்டிக், சிகரெட் பறிமுதல்
/
கடைகளில் சோதனை; பிளாஸ்டிக், சிகரெட் பறிமுதல்
ADDED : ஏப் 21, 2025 08:33 PM
கூடலுார்; கூடலுார், இன்ஸ்பெக்டர் சாகுல் தலைமையில், எஸ்.ஐ., கபில்தேவ், போலீசார், நகராட்சி ஊழியர்கள் கூடலுார்- ஊட்டி சாலையில் உள்ள, சில கடைகளில்,சோதனை மேற்கொண்டனர். அந்த கடையில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட, 500 கிராம் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பள்ளி அருகே உள்ள கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறுகையில், பள்ளி அருகே உள்ள கடைகளில் சிகரெட் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை மீறி சிகரெட் விற்பனை செய்தால், அவைகள் பறிமுதல் செய்வதுடன், சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படும்,' என்றனர்.