/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குறும்பட விழா துவக்கம்; சிறந்த படைப்புக்கு தங்க யானை
/
குறும்பட விழா துவக்கம்; சிறந்த படைப்புக்கு தங்க யானை
குறும்பட விழா துவக்கம்; சிறந்த படைப்புக்கு தங்க யானை
குறும்பட விழா துவக்கம்; சிறந்த படைப்புக்கு தங்க யானை
ADDED : டிச 27, 2024 10:24 PM

ஊட்டி; ஊட்டியில், மாவட்ட நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் அசெம்பிளி திரையங்கில் கடந்த, 8 ஆண்டுகளாக குறும்பட விழா நடந்து வருகிறது.
நடப்பாண்டின் குறும்பட விழா நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது. விழாவின் தலைவர் ரவி செந்தில்குமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்திராக பங்கேற்ற நீலகிரி எஸ்.பி., பேசுகையில்,''ஊட்டி சினிமா சூட்டிங் நடத்துவதற்கு பிரபலமான இடம்; இந்த பகுதி சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக விளங்கி வருகிறது.
இங்கு சினிமா ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் குறும்பட விழா சிறப்பு வாய்ந்தது. இதனை சுற்றுலா பயணிகளும் கண்டுகளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்,மாவட்ட தலைவர் முகமது பரூக் கூறுகையில்,'' குறுப்பட விழாவில், 150 படங்கள் இடம் பெறுகின்றனர். 7 சிறந்த குறும்படங்களுக்கு தங்க யானை உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்படுகிறது. அனுமதி இலவசம்.
பழங்குடிகளான, தோடர் மக்களின் குறும்படம் விழாவில் சிறப்பு சேர்ப்பதாக அமையும்,'' என்றார். திரையரங்கின் செயலர் ராதாகிருஷ்ணன், குறும்படவிழா ஒருங்கிணைப்பாளர்கள் பரமேஸ்வரன், குலசேகரன், யோகா உட்பட பலர் பங்கேற்றனர்.

