/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் குறும்பட விழா 27-ல் துவக்கம்
/
ஊட்டியில் குறும்பட விழா 27-ல் துவக்கம்
ADDED : டிச 25, 2024 07:50 PM
ஊட்டி; நீலகிரி மாவட்ட வியாபாரிகள் சங்க பேரமைப்பு சார்பில், ஊட்டியில் குறும்பட விழா நடக்கிறது.
இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர் முகமதுபரூக் நிருபர்களிடம் கூறுகையில்,'' ஊட்டியில் கடந்த, 8 ஆண்டுகளாக குறும்பட விழா நடந்து வருகிறது. நடப்பாண்டு நடக்கும் குறும்பட விழாவில், 150 படங்கள் இடம்பெறுகிறது.
இவ்விழாவில், 7 சிறந்த குறும்படங்களுக்கு தங்க யானை  உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த குறும்படங்களை காண வரும் மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. ஊட்டி அசெம்பிளி தியேட்டர் அரங்கில், 27ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் குறும்பட விழா நடக்கிறது.
இறுதி நாள் நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று பரிசுகளை வழங்குகிறார்,'' என்றார். நிர்வாகிகள் ராஜா முகமது, குலசேகரன், சாதிக் ஆகியோர் உடனிருந்தனர்.

