தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வனத்தில் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்கள்...குமுறல்!: பணி ஓய்வு பெறும் வயதிலும் பதவி உயர்வு இல்லை

வனத்தில் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்கள்...குமுறல்!: பணி ஓய்வு பெறும் வயதிலும் பதவி உயர்வு இல்லை

வனத்தில் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்கள்...குமுறல்!: பணி ஓய்வு பெறும் வயதிலும் பதவி உயர்வு இல்லை


UPDATED : ஆக 21, 2026 04:42 AM

ADDED : ஆக 20, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2026 04:42 AM ADDED : ஆக 20, 2026 05:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: 'தமிழக வனத்துறையில், 31 ஆண்டுகளாக பணியாற்றியும் தற்காலிக வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக வனத்துறையில், அடர்ந்த வனப்பகுதிகளை பாதுகாத்தல், காட்டுதீயை கட்டுப்படுத்துதல் மற்றும் மனித-விலங்கு மோதல்களை தடுத்தல் போன்ற அபாயகரமான பணிகளில், வேட்டை தடுப்பு காவலர்கள் (ஏ. பி. டபிள்யு), விரைவு நடவடிக்கை படை (ஆர்.ஆர்.டி.) மற்றும் மனித விலங்கு மோதல் தடுப்பு கண்காணிப்பாளர் (ஏ.டி.எஸ்.,) ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு மாதம், 15,625 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கும் நிலையில், இ.எஸ் ஐ.,- பி.எப்., போன்ற பணி பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய சலுகைகள் இல்லை.

பணி நிரந்தரம் இல்லை கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களை காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கால கட்டங்களில் உத்தரவிட்டுள்ளதுடன், வனத்துறை அரசாணை- 64, அடிப்படையில் முன்னுரிமை பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. களத்தில், 31 ஆண்டுகளுக்கும் மேலாக வனத்தையும் வனவிலங்குகளையும் காக்க உயிரை பணயம் வைத்து உழைத்த மூத்த காவலர்கள், தங்களை இன்னும் பணி நிரந்தரம் செய்யாமல் இழுத்தடிப்பதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

704 பேர் நேரடி நியமனம் தங்களை பணி நிரந்தரம் செய்ய நீண்ட காலமாக வலியுறுத்தியும், மாநிலம் முழுவதும், 10 முதல் 31 ஆண்டுகள் வரை தொடர்ந்து பணியாற்றி வரும் ஊழியர்கள், இதுவரை தற்காலிக பணியாளர்களாக நீடிக்கின்றனர். இதற்கிடையே, சமீபத்தில் புதிதாக, 704 வனக்காவலர்கள் நேரடியாக நியமிக்கப்பட்ட நிலையில், 31 ஆண்டுகளாக காடுகளில் பணியாற்றிய இவர்களை வழிநடத்தும், தற்காலிக காவலர்கள் தொடர்ந்து, அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், ஓய்வு பெறும் தற்காலிக பணியாளர்கள் எந்த ஓய்வூதிய பலனும் இல்லாமல் செல்லும் அவலம் உள்ளது.

பதவி உயர்வும் இல்லை குன்னுார் வனச்சரகத்தில் கடந்த, 1994ம் ஆண்டு முதல் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வரும் பிரபுராஜ் கூறுகையில்,'' இதில் பணிபுரியும், 990 பேரில், கடந்த 2023ல், 111 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு சம்பளமும், 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால், 31 ஆண்டுகளுக்கும் மேலாக வன பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மூத்த காவலர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது. அத்துடன், அப்போதைய நேர்முக தேர்வில் பங்கேற்ற, 86 பேரின் பணி நிரந்தர கோப்புகள் பல ஆண்டுகளாக முதன்மை தலைமை வன பாதுகாவலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us