/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சித்தா மற்றும் ஆயுர்வேத இலவச மருத்துவ முகாம்
/
சித்தா மற்றும் ஆயுர்வேத இலவச மருத்துவ முகாம்
ADDED : பிப் 19, 2024 12:31 AM

கூடலுார்:கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள உழவர் சந்தையில், 'ரோட்டரி கிளப் ப்ளூ மவுன்டன்,' சங்கம் மற்றும் தனியார் ஆயுர்வேத மருந்தகம், சித்தா மற்றும் ஆயுர்வேத இலவச மருத்துவ முகாம் நடந்தது.
சங்க தலைவர் எல்ஜோதாமஸ் துவக்கி வைத்தார். உழவர் சந்தை உதவி மேலாண்மை அலுவலர் லட்சுமணன், செயலாளர் அஜி, திட்ட தலைவர்கள் அனிஷ், யாசின்செரிப் பங்கேற்றனர்.
தொடர்ந்து, சித்தா டாக்டர்கள் கரூசந்தானம், பிரதீப், சரிதாஷாஜி ஆகியோர், நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.
நோய்களுக்கு தேவையான சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
அங்கு வந்த அனைவருக்கும், இலவசமாக சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனையும் செய்யப்பட்டது.

