ADDED : பிப் 28, 2024 09:04 PM
அ நிறம் | அளவு
ஊட்டி : ஊட்டி கமர்சியல் சாலை நடைபாதையில் சிலர் கடை வைத்துள்ளதால், பாதசாரிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ஊட்டி கமர்சியல் சாலை பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதியாக உள்ளது. இச்சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் காய்கறி வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை.
கமிஷனர் ஏகராஜ் கூறுகையில், ''கமர்சியல் சாலை பகுதியில் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் அனுமதியின்றி கடை வைக்க கூடாது. உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
