ADDED : செப் 16, 2025 09:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுாரை சேர்ந்த சிலம்பம் மாஸ்டர் நெடுமாறன் தலைமையில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, குன்னுார் அரசு கலை கல்லுாரியில் பீசலு அறக்கட்டளை சார்பில், மாணவ, மாணவியருக்கு சிலம்பம் பயிற்சி துவங்கப் பட்டது. பயிற்சி துவக்க விழாவிற்கு கல்லுாரி முதல்வர் சனில் தலைமை வகித்தார். பயிற்றுனர் மகேஸ்வரி, பீசலு அறக்கட்டளை நிர்வாகி ஷாலினி முரளிதரன் முன்னிலை வகித்தனர்.