ADDED : மார் 13, 2026 06:36 AM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுாரில் இறைச்சிக்காக கன்றுகுட்டியை வதை செய்வது தொடர்பாக சிலாட்டர் ஹவுஸ் சீல் வைக்கப்பட்டது.
குன்னுாரில் கால்நடை மருத்துவரின் ஆய்வு சான்று இல்லாமல், சிலாட்டர் ஹவுசில் கன்றுகுட்டியை வதை செய்வது தொடர்பாக, இந்து முன்னணி துணை தலைவர் கோகுல் கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் ஆகியோர் நகராட்சி அதிகாரிகளுக்கும், டவுன் இன்ஸ்பெக்டருக்கும் மனு அளித்தனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் சித்தநாதன் ஆய்வு மேற்கொண்டு, உறுதி செய்யப்பட்டு சிலாட்டர் ஹவுசுக்கு சீல் வைத்தார். டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
