/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'சில்ஹல்லா' கருத்து கேட்பு கூட்டம்: திடீர் ஒத்திவைப்பு
/
'சில்ஹல்லா' கருத்து கேட்பு கூட்டம்: திடீர் ஒத்திவைப்பு
'சில்ஹல்லா' கருத்து கேட்பு கூட்டம்: திடீர் ஒத்திவைப்பு
'சில்ஹல்லா' கருத்து கேட்பு கூட்டம்: திடீர் ஒத்திவைப்பு
ADDED : மார் 18, 2025 09:22 PM
ஊட்டி :
சில்ஹல்லா மின் திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த, 2013ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில், 110 விதியின் கீழ், 7000 கோடி ரூபாய் மதிப்பில், 2000 மெகாவாட் மின் திட்டமான 'சில்ஹல்லா,' மின் திட்டத்தை அறிவித்தார்.
இந்தத் திட்டத்தால், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், ஆயிரத்திற்கு மேற்பட்ட தேயிலை, மலை காய்கறி தோட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக, 'இந்த திட்டத்தை செயல்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்; தவறும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்துவோம்,' என, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அறிவித்தனர்.
கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு
இதை தொடர்ந்து, 'இம்மாதம், 20ம் தேதி குந்தா மின் நிலைய அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும்,' என , மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சில்ஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் தொடர்பாக, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், 20ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
நிர்வாக காரணங்களுக்காக அன்றைய தினம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.