/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் 'சில்ஹல்லா' மின் திட்ட குழப்பங்கள்; பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் எப்போது?
/
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் 'சில்ஹல்லா' மின் திட்ட குழப்பங்கள்; பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் எப்போது?
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் 'சில்ஹல்லா' மின் திட்ட குழப்பங்கள்; பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் எப்போது?
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் 'சில்ஹல்லா' மின் திட்ட குழப்பங்கள்; பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் எப்போது?
ADDED : ஏப் 29, 2025 09:09 PM

ஊட்டி; 'சில்ஹல்லா மின் திட்டம் தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த, 2013ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில், 110 விதியின் கீழ், 7,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 மெகாவாட் 'சில்ஹல்லா' மின் திட்டத்தை அறிவித்தார். அதன்படி, 'சில்ஹல்லா' ஆற்றின் குறுக்கே, 75 மீட்டர் உயரத்தில் ஒரு அணை மற்றும் குந்தா ஆற்றின் குறுக்கே, 108 மீட்டர் உயரத்தில் ஒரு அணை எழுப்பி இவற்றை முறையே, மேலணை மற்றும் கீழ் அணையாக கொண்டு, 2.8 கி.மீ., துாரத்திற்கு குகை வழி நீர் குழாய்கள் அமைத்து இந்த நீரேற்று புனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது நீர் மின் நிலையமாக மட்டுமின்றி, நீரேற்று குகை மின் நிலையமாக அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக மொத்தம், 980 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
கிராம மக்கள் எதிர்ப்பு
இந்தத் திட்டத்தால், கானுயிர்களுக்கும், மலை பகுதிக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்க கூடும் என்றும்; மேய்ச்சல் மற்றும் விவசாய நிலங்களை விவசாயிகள் இழக்க வேண்டி வரும்,' என கூறி, 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், 'சில்ஹல்லா மின் திட்டம் அறிவிக்கப்பட்டு தற்போது, 12 ஆண்டுகளை கடந்து விட்டது. சில அமைப்புகள் இத்திட்டம் குறித்து ஆர்.டி.ஐ., யில் கேட்டபோது, 'இன்னும் எந்த அனுமதியும் மத்திய அரசால் கிடைக்க பெறவில்லை,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த, மார்ச், 20ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்த மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டது. திடீரென கருத்து கேட்பு கூட்டத்தை ஒத்தி வைத்து மாவட்ட கலெக்டர் அறிக்கை வெளியிட்டார். ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் கூட்டம் நடத்தப்படவில்லை. இதற்கிடையே, கிராம மக்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மின் திட்ட அதிகாரிகள் கூறுகையில்,'சில்ஹல்லா மின் திட்டத்திற்காக கடந்த மார்ச், 20ம் தேதி கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மறு தேதி குறிப்பிடாமல் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்த கருத்து கேட்பு கூட்டம் நடத்த, மாநில அரசின் உத்தரவின் கீழ், மாவட்ட நிர்வாகம் தான் தேதி அறிவிக்க வேண்டும். மாசுகட்டுப்பாட்டு வாரியம்; மாவட்ட நிர்வாகம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி தெளிவுப்படுத்தினால் மட்டுமே இந்த திட்டம் குறித்து முழு தகவல்கள் தெரியவரும்,' என்றனர்.

