பள்ளிகள் திறந்த நிலையில் வெறிச்சோடிய சிம்ஸ் பூங்கா
பள்ளிகள் திறந்த நிலையில் வெறிச்சோடிய சிம்ஸ் பூங்கா
ADDED : ஜூலை 03, 2026 03:21 AM

அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் சிம்ஸ் பூங்காவி ல் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.
குன்னுாரில் நேற்று காலை பரவலாக மழை பெய்த போதும் மேகமூட்டம், வெயில் என மாறுபட்ட கால நிலை நிலவியது.
இந்நிலையில், சுற்றுலா மையங்களான சிம்ஸ் பூங்கா, லேமஸ்ராக், டால்பின் நோஸ் போன்ற காட்சி முனைகளில் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. சிம்ஸ் பூங்கா சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சிறுவர் பூங்காவில் குழந்தைகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
