/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறியூர் மாரியம்மன் ஆபரண பெட்டி அழைப்பு நிகழ்ச்சி
/
சிறியூர் மாரியம்மன் ஆபரண பெட்டி அழைப்பு நிகழ்ச்சி
சிறியூர் மாரியம்மன் ஆபரண பெட்டி அழைப்பு நிகழ்ச்சி
சிறியூர் மாரியம்மன் ஆபரண பெட்டி அழைப்பு நிகழ்ச்சி
ADDED : மார் 03, 2026 06:31 AM

கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல் கிராமத்தில் இருந்து, சிறியூர் மாரியம்மன் ஆபரண பெட்டி அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
ஊட்டி அருகே, சிறியூரில் எழுந்தருளியுள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடக்கிறது.நடப்பாண்டு வரும், 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் திருவிழா நடக்கிறது. அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த விழாவுக்காக, கூக்கல் கிராமத்தில் இருந்து, அம்மனின் ஆபரண பெட்டி வண்ண குடைகளின் கீழ், அழைத்து செல்லும் விழா நேற்று காலை நடந்தது.
முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் சிறப்பு பூஜை நடத்தி, பஜனை மற்றும் ஆடல பாடலுடன் அம்மனை ஊர்வலமாக சிறியூருக்கு அழைத்து சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

