/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிரியூர் மாரியம்மன் கோவில் குண்டம் கோலாகலம்
/
சிரியூர் மாரியம்மன் கோவில் குண்டம் கோலாகலம்
ADDED : மார் 05, 2024 11:24 PM
கோத்தகிரி:மசினகுடி அருகே உள்ள சிரியூர் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடந்தது.
விழாவை முன்னிட்டு, கடந்த. 26ம் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. 27ம் தேதி கம்பம் நடு விழா நடந்தது. தொடர்ந்து, 28,29ம் தேதிகளில் அம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது.
கடந்த, 3ம் தேதி, அம்மன் அழைப்பு நிகழ்ச்சியும், 4ம் தேதி பூகுண்டத்திற்கு மரம் கொண்டுவரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 3:00 மணிக்கு, ஸ்ரீ மாசி கரியபண்ட ஐயன் அழைப்பு நடந்தது.
மாலை, 3:30 மணிமுதல் 6:00 மணிவரை அன்னதானமும், இரவு, 12:00 மணிக்கு, ஜாகரை தேர் நவதானிய பூஜை நடந்தது.
இரவு, 8:00 மணிக்கு, குருமுடி ஸ்ரீ ஜெடையலிங்க கலா மன்றத்தாரின் 'சோகத்தா... சொந்த' என்ற படுக மொழி நாடகம் நடந்தது.
முக்கிய திருவிழா நாளான நேற்று காலை, 7:00 மணிக்கு பூ குண்டம் நடந்தது. விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். தொடர்ந்து, முடிக் காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
விழாவை முன்னிட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சிரியூர் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை, கூக்கல் எட்டு ஊர் தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

