/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிரியூர் மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பு பூஜையுடன் நிறைவு
/
சிரியூர் மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பு பூஜையுடன் நிறைவு
சிரியூர் மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பு பூஜையுடன் நிறைவு
சிரியூர் மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பு பூஜையுடன் நிறைவு
ADDED : மார் 07, 2024 05:02 AM

கோத்தகிரி, : மசினகுடி அருகே, சிரியூர் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா சிறப்பு பூஜையுடன் நிறைவடைந்தது.
கடந்த, 26ம் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது.
கடந்த, 3ம் தேதி, அம்மன் அழைப்பும், 4ம் தேதி பூகுண்டத்திற்கு மரம் கொண்டுவரும் நிகழ்ச்சியுடன், ஸ்ரீ மாசி கரியபண்ட ஐயன் அழைப்பு நடந்தது.
இரவு, 12:00 மணிக்கு, ஜாகரை தேர் நவதானிய பூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, படுக மொழி நாடகம் நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு பூ குண்டம் நடந்தது. தொடர்ந்து, முடிக்காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கூக்கல் எட்டு ஊர் தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.