/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிடப்பில் போட்ட சிறியூர் சாலை சீரமைப்பு பணி; மக்கள் அதிருப்தி
/
கிடப்பில் போட்ட சிறியூர் சாலை சீரமைப்பு பணி; மக்கள் அதிருப்தி
கிடப்பில் போட்ட சிறியூர் சாலை சீரமைப்பு பணி; மக்கள் அதிருப்தி
கிடப்பில் போட்ட சிறியூர் சாலை சீரமைப்பு பணி; மக்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 09, 2025 09:38 PM

கூடலுார்; மசினகுடி, வாழை தோட்டம் - சிறியூர் சாலை சீரமைப்பு பணி துவங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முதுமலை, மசினகுடி அருகே உள்ள, வாழை தோட்டம் முதல் சிறியூர் வரை, 14 கி.மீ., சாலை 1983 சீரமைக்கபட்டது. தொடர், பராமரிப்பு இன்றி சாலை சேதம் அடைந்தது. இச்சாலையை சீரமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு, 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. டிச., மாதம் சாலை, 3 மீட்டர் அகலத்தில் சீரமைக்கும் பணி துவங்கப்பட்டது.
'சாலையின் அகலம், ஒப்பந்தத்தில் உள்ளதை விட குறைவாக இருப்பதாகவும், ஒப்பந்தத்தில் உள்ளபடி, 3.75 மீட்டர் அகலத்தில் சாலை சீரமைக்க வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தினர். ஒப்பந்ததாரர், 'வனத்துறை உத்தரவுப்படி, 3 மீட்டர் அகலத்தில் சாலை சீரமைத்து வருகிறோம்.
மக்கள் இதனை ஏற்க மறுத்ததால், சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையில் சீரமைப்பு பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து,7 மாதமாக பணிகள், கிடப்பில் போட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மக்கள் கூறுகையில், 'சாலை சீரமைப்பு பணி துவங்கப்பட்டு நிறுத்தப்பட்டது குறித்து, சமீபத்தில் மசினகுடி வந்த, தேசிய பழங்குடி ஆணைய உறுப்பினர்களிடம் புகார் தெரிவித்தோம். அவர்களிடம் பேசிய அதிகாரிகள், சாலை சீரமைப்பு தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விட்டது. சில நாட்களில் சாலை பணிகள் துவங்கப்படும் என, உறுத்தியளித்துள்ளனர். இதில், உள்ள பிரச்னைகளை தீர்க்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணிகளை விரைவில் முடித்தால் எங்கள் பிரச்னை தீரும்,' என்றனர்.

